புதிய வீடு கட்டும் பொழுது எந்தவித தடைகளும் ஏற்படாமல் இருக்க..ஆன்மீக வழிபாடுகள்!!

Photo of author

By Janani

புதிய வீடு கட்டும் பொழுது எந்தவித தடைகளும் ஏற்படாமல் இருக்க..ஆன்மீக வழிபாடுகள்!!

Janani

To avoid any obstacles while building a new house..Spiritual worship!!

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படை தேவைகள் என இருப்பது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகியவை தான். அதேபோன்று எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்பது போல ஒரு சிறிய வீடாக இருந்தாலும் தனது சொந்த வீடாக இருக்க வேண்டும். இவ்வாறு நம் சொந்த வீடுகளில் வாழும்பொழுது ஒரு தனி மரியாதையும் மதிப்பும் உண்டாகும்.
அவ்வாறு ஒருவர் கஷ்டப்பட்டு ஒரு சொந்த வீடு கட்ட முயன்ற போது அதில் ஏகப்பட்ட தடங்கல்கள் ஏற்படும். அவ்வாறு அந்த தடங்கல்கள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மற்றும் அதனை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்த விளக்கங்களை பார்ப்போம்.
ஜாதகத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்தினை கூறலாம். ஏனென்றால் அத்தனை ஆளுமை தன்மைகளையும், அதிகாரங்களையும் கொண்டது இந்த செவ்வாய். அதேபோன்று ஒருவருக்கு நல்ல நிலம், வீடு, மனை, சொத்து, பணம் ஆகிய அனைத்தும் சேர வேண்டும் என்றால் அதற்கான வழியை தருவதும் இந்த செவ்வாய் கிரகம் தான். ஆனால் இந்த செவ்வாய்க்கே அதி தேவதையாக விளங்குவது நமது முருகப்பெருமான். எனவே முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் இந்த தடைகளை நீக்கிக் கொள்ளலாம்.
ஒருவருக்கு வீடு கட்டுவதில் தடை ஏற்படுகிறது, நிலம் வாங்குவதில் தடை ஏற்படுகிறது அல்லது ஏதேனும் ஒரு செயலை செய்ய தடை வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுக்கு உள்ள தடைகள் அனைத்தும் நீக்கப்படும்.
இன்று நிறைய பேருக்கு இருப்பது வீடு கட்டுவதில் ஏற்படும் தடைகள் தான்.அதனை நீக்குவதற்கு செவ்வாய்க்கிழமை அன்று முருகர் கோவிலில் இருக்குமாறு சென்று அங்கு முருகரை வழிபாடு செய்து விட்டு அந்த கோவில் பரிகாரத்தை சுற்றிவர வேண்டும். அவ்வாறு சுற்றி வரும் பொழுது முருகரைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ என்று சொல்லி தனது வேண்டுதலை கூற வேண்டும்.
இவ்வாறு வழிபாட்டை முடித்த பிறகு குறைந்தது 6 மணி நேரமாவது கோவிலிலேயே இருக்க வேண்டும். பிறகு அந்த கோவிலில் இருந்து நீரை எடுத்து வரவேண்டும். பிறகு வீட்டிற்கு வந்து அந்த நீரில் சிறிது மஞ்சளை கரைத்து அந்த மஞ்சள் நீரை தடைபட்டுள்ள கட்டிடத்தில் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு ஒரு முறை அந்த நீரை தெளித்ததும் சிலருக்கு அந்த தோஷம் நீங்கிவிடும். ஆனால் சிலருக்கு நீங்காமலும் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்கள் தொடர்ந்து ஆறு வாரம் செவ்வாய்க்கிழமைகளில் சென்று நீரை எடுத்து வந்து மஞ்சளை கரைத்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே முருகனின் படம் மற்றும் வேலினை பச்சரிசியில் வைத்து அவற்றிற்கு சந்தனம் குங்குமம் இட்டு ஏதேனும் ஒரு பூவினை கொண்டு 108 முறை ஓம் சரவணபவ ஓம் சரவணபவ என்று வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வீடு கட்டுவதில் ஏற்பட்டுள்ள தடைகள் நீங்கி ஒரு நல்ல வழி பிறக்கும்.