காகத்திற்கு உணவு வைப்பது என்பது ஒரு சாதாரண காரியம் கிடையாது. அது பலவிதமான நன்மைகளை நமக்கு தேடித் தரும். ஒரு சிலர் காகத்திற்கு சாதம் வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை தெரியாமலேயே சாதம் வைப்பார்கள். ஒரு சிலர் தோஷங்கள் நீங்கவும், பரிகாரத்திற்காகவும் காகத்திற்கு சாதம் வைப்பார்கள்.
இவ்வாறு காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது, அந்த சாதத்தினை காகம் சாப்பிட்டு அதன் பசியை தீர்த்துக் கொள்வதனால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பதை பலரும் அறியாமல் இருப்பர். ஒருவரின் உயிரை காப்பாற்றும் அளவிற்கு கூட இந்த ஒரு செயல் நமக்கு உதவும்.
காகத்திற்கு சாதாரணமாக நாம் எப்பொழுதும் வைக்கும் உணவுடன் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து வைக்கும் பொழுது, கிடைக்கக்கூடிய பலன்கள் இரண்டு மடங்காக அதிகரித்து நமக்கு கிடைக்கும்.
ஒரு சிலர் காகத்திற்கு தினமும் உணவு வைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஒரு சிலர் அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளில் மட்டுமே வைப்பார்கள். பெரும்பாலானோர் சனிக்கிழமை நாட்களில் காகத்திற்கு உணவு வைப்பார்கள். இதற்கு காரணம் காகம் என்பது சனிபகவானின் வாகனம் என்பதாலும், காகம் என்பது பித்ருக்களின் மறு உருவம் என்பதாலும் சனிக்கிழமை நாட்களில் பெரும்பாலானோர் உணவு வைக்கின்றனர்.
ஒரு வீட்டிற்கு காகம் வருகிறது என்றாலே அது அதிர்ஷ்டம் தான். அவ்வாறு காகம் வீட்டிற்கு வருகிறது என்றால், நமது முன்னோர்களின் ஆசி நமக்கு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆனால் ஒரு சில வீட்டிற்கு காகம் வருவதோ, வீட்டின் மேல் அமர்ந்து கரைவதோ செய்யாது. இது போன்ற வீடுகளில் பித்ருக்களின் சாபம் என்பது இருக்கும்.
ஒரு குடும்பத்திற்கு பித்ருக்களின் சாபம் இருந்தால் அந்த வீட்டில் எப்பொழுதும் கஷ்டங்கள் இருந்து கொண்டே இருக்கும். எனவே இது போன்ற சாபங்கள் மற்றும் தோஷங்கள் இருப்பவர்கள், தினமும் காகத்திற்கு உணவினை வைக்க வேண்டும். அப்பொழுதுதான் பித்ருக்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைத்து, காகம் ஆனது நமது வீட்டிற்கு வரத் தொடங்கும். மேலும் பித்ருக்களின் ஆசிர்வாதத்தை நாம் பெறுவதற்கு உகந்த மற்றும் சிறந்த வழியும் இதுதான்.
எனவே காகத்திற்கு தினமும் முடிந்த அளவிற்கு சாதம் வைக்க வேண்டும். அதேபோன்று நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரவும், கடன் பிரச்சனைகள் தீரவும், பித்ரு தோஷம் மற்றும் சனி தோஷம் இது போன்ற தோஷங்கள் நீங்கவும் காகத்திற்கு நாம் வைக்கக்கூடிய உணவுடன் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து வைத்தால் நிச்சயம் தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
அந்த பொருள் என்னவென்றால் 1. பிஸ்கட் 2. தண்ணீர். பிஸ்கட் என்பது காகம் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பொருள்தான். எனவே காகம் இதனை சாப்பிடுமா? சாப்பிடாதா? என்ற பயம் கொள்ளத் தேவையில்லை. இந்த உணவு காகத்திற்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தினமும் காகம் உங்களது வீட்டிற்கு வரும். எனவே காகத்திற்கு தினமும் உணவு வைக்கலாம். அதே சமயம் காகத்திற்கு தினமும் இந்த உணவுப் பொருட்களை வைப்பதன் மூலம் நமது தோஷங்களும் நீங்கிவிடும்.
இந்த ஒரு செயலை மட்டும் தினமும் செய்து வாருங்கள், இதனால் கிடைக்கக்கூடிய பலன்களை உங்களால் நிச்சயம் கண்கூடாக காண முடியும். இந்த ஒரு எளிய பரிகாரத்தின் மூலம் உங்களது கஷ்டங்கள் அனைத்தும் சிறிது சிறிதாக குறைவதை கண்டிப்பாக உங்களால் உணர முடியும். இது ஒரு சாதாரண செயல்தான், ஆனால் இதன் பலன்கள் மிகவும் அதிகம்.