தமிழக அரசு தரும் ரூ.3 லட்சம் கிடைக்க.. உடனே இதை செய்யுங்கள்!!

Photo of author

By Jeevitha

Viluppuram: மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க அரசு சுமார் 3 லட்சம் பணம் தருவதாக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என தெரியாமல் உள்ளனர். இந்த திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்று விழுப்புரம் அரசு அதிகாரி விளக்கியுள்ளார்.

முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு முக்கிய காரணம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விலை உயர்ந்த மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு B.Pharm/D.Pharm படிப்பு முடித்து சான்று பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 20.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை வீடு இருக்க வேண்டும். மேலும் சொந்த இடம் என்றால் அதற்கான ரசீது கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும். வாடகை வீடு என்றால் கண்டிப்பாக உரிமையாளர் ஒப்பந்தம் இருக்க வேண்டும்.

இந்த முறையில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு தவணையாக பணம் வழங்கப்படும். முதல் மானிய தொகை ரூ.1.5 லட்சம் உடனடியாக தரப்படும். அதில் முதல்வர் மருந்தகம் அமைக்க தேவையான குளிர்சாதன பெட்டி, ஏசி, மருந்து வைப்பதற்கு தேவையான பெட்டிகள் என அனைத்தும் வாங்கி கொள்ளலாம். இரண்டாவது தவணையில் ரூ.1.5 லட்சம் மதிப்புக்கு மருந்துகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.