TVK: தமிழக வெற்றிக் கழக கட்சியில் கூட்டணி வைக்க போகும் கட்சி பாமக என கூறப்படுகிறது. இதற்கு காரணம் பாமக நிறுவனர் தனது எக்ஸ் பக்கத்தில் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்று திடீரென்று பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில் அவர் தன் கட்சியில் கூட்டணி வைக்கப் போகும் கட்சிகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் பாமக கூட்டணி அமைக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த கேள்விக்கு பின் வேறு ஒரு முக்கியமான நபரும் காரணமாக இருக்கிறார். அவர் ஜான் ஆரோக்கியராஜ். தற்போது விஜய்யின் அரசியல் முடிவுகளுக்கு பின்னணியில் இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்பவர். இவர் ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார். இதன் அடிப்படையில் இவர், பாமகவுக்கும் நெருக்கம் மற்றும் விஜய்க்கும் நெருக்கம், எனவே இவர்கள் இருவரும் கூட்டணி வைக்க போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியராஜ் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தான் பாமக – தவெக இடையே கூட்டணி வைக்க காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாமக தேர்தலில் சறுக்கினாலும் ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த பிரச்சாரம் தான் மிகப்பெரிய பிரபலம். ஜான் ஆரோக்கியராஜ் தான் இரு கட்சிகளுக்கும் இடையில் இருப்பதால் இவர்கள் தான் தவெக கட்சியில் முதலாவதாக கூட்டணி வைக்கப் போகிறார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.