வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும் இந்த ஒரு விளக்கில் தீபம் ஏற்றுங்கள்..!!

Photo of author

By Janani

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும் இந்த ஒரு விளக்கில் தீபம் ஏற்றுங்கள்..!!

Janani

Updated on:

பொதுவாக ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் தினமும் விளக்கேற்றுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் அந்த ஒளி தான் வீட்டில் இருக்கக் கூடிய இருளை போக்கக்கூடிய ஒரு வெளிச்சம். எந்த ஒரு வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலையும் விளக்கு ஏற்றப்படுகிறதோ, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதாவது அந்த வீட்டில் மங்கலம் உண்டாகி இருக்கும் என்பது குறிப்பிடப்படுகிறது.

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளையும், கண் திருஷ்டிகளையும் நீக்கி புத்துணர்ச்சியை தரக்கூடிய தீபங்களுள் ஒன்றுதான் கற்பூர தீபம். இந்த விளக்கினை பூஜை அறையில்தான் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளலாம்.

இந்த தீபத்தை நமது வீட்டில் ஏற்றும் பொழுது மகாலட்சுமியின் அனுக்கிரகமும் நமக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது, கண் திருஷ்டியால் பாதிப்பு ஏற்பட்டு கொண்டே இருக்கிறது, பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது, வியாபாரத்தில் தடைகள், பணம் தொடர்பான பிரச்சனைகள் இதுபோன்ற எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் இந்த ஒரு தீபத்தை நமது வீட்டில் ஏற்றுவதன் மூலம் அனைத்து பிரச்சனைகளும் பரந்து ஓடிவிடும்.

பச்சைக் கற்பூர தீபம் என்றே கடைகளில் விற்கப்படுகிறது. அந்த தீபத்தை வாங்கி வந்து, அதன் கீழ் பகுதியில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபத்தை ஏற்றிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதன் மேல் பகுதியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் பச்சை கற்பூரம், இரண்டு ஏலக்காய், 2 கிராம்பு, சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை போட வேண்டும்.

இப்பொழுது அந்த தீபம் எரிய எரிய அதன் மேல் பகுதியில் உள்ள தண்ணீர் சூடாகி, அதில் உள்ள பொருட்களின் நறுமணங்கள் வீடு முழுவதும் பரவத் தொடங்கும். அந்த நறுமணம் தான் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல்கள் ஆகிய அனைத்தையும் நமது வீட்டில் இருந்து துரத்தி அடிக்கும்.

இந்த தீபத்தை காலை நேரத்தில் ஏற்றுவது மிகவும் சிறப்பு. இந்த தீபத்தில் இருந்து வரக்கூடிய வாசனை எந்தவித மன அழுத்தத்தையும் போக்கிவிடும். இந்த தீபத்தில் நாம் போடக்கூடிய பச்சை கற்பூரம் என்பது பண பிரச்சனையை தீர்க்கக் கூடிய ஒரு அற்புத சக்தி வாய்ந்த பொருளாகும். எனவே இதன் வாசனை வீடு முழுவதும் பரவும் பொழுது, வீட்டில் இருக்கும் பணப் பிரச்சனைகள் நீங்கி பணவரவு ஏற்படும்.