மலை கிராமங்களில் வாழும் மக்களுக்கு..தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

மலைவாழ் மக்களுக்கு நம் தமிழக அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அந்த திட்டம் என்னவென்றால் அவசர கால சிகிச்சைக்கு “Bike Ambulance” என்ற முறையை தொடங்கி வைத்துள்ளது.

தமிழக அரசு எவ்வளவு நலத்திட்டங்கள் செய்தாலும் மலைவாழ் மக்களுக்கு அது கிடைப்பதில்லை. அதனை சரி செய்ய மலைவாழ் மக்களுக்கு போதிய மருத்துவ வசதி மற்றும் கல்வி வசதி போன்ற அடிப்படை திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு  நம் தமிழக  அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது அவசர கால கட்டங்களில் போக்குவரத்து வசதியற்ற கிராம பகுதிகளுக்கு அவர்களின் நலனை  கருத்தில்கொண்டு 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் வாங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மருத்துவமனைக்கு எளிதில் அழைத்து வர முடியாத, போக்குவரத்து வசதி இல்லாத மலை பகுதியில் வாழும் மக்களுக்கு என அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு அரசின் முதல் கட்டமாக 1.60 கோடி ரூபாய் செலவில் வாகனங்கள் வாங்குவதற்கு அரசு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் போக்குவரத்து வசதி இல்லாத கிராம பகுதிகளில் உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த இருசக்கர வாகனத்தில் உரிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டு இருக்கும். மேலும் நோயாளிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு அங்குள்ள மருத்துவமனைக்கு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என அறிவித்துள்ளது. இந்த முறை 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக செயல்படுகிறது.