தீவிரமடைந்த பருவமழை! 4 மாவட்டங்களில் பெய்ய இருக்கும் அதி கனமழை!

Photo of author

By Sakthi

இலங்கையை ஒட்டி இருக்கக் கூடிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 3புள்ளி ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும், நாளையும், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது. திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர் திருச்சிராப்பள்ளி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.