தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம்!

0
173

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகின்றது.இதன் காரணமாக தமிழகத்தில் திருவாரூர்,காஞ்சிபுரம், சென்னை,திருவண்ணாமலை, வேலூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொருத்தமட்டில் புறநகர் பகுதியில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.

மேற்கு வங்கம்,ஒடிசா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
Next articleவாய்ப்பு கொடுத்தால் திமுகவிற்கு எதிராக வரும் தேர்தலில் போட்டியிடுவேன் ! எம்.எல்.ஏ பேட்டி !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here