தங்கம் வாங்குபவர்களுக்கு சர்ப்ரைஸ்!! குறைந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்!!

Photo of author

By Sakthi

தங்கம் வாங்குபவர்களுக்கு சர்ப்ரைஸ்!! குறைந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்!!

Sakthi

Today, a piece of Sawaran Aparana Gold sells for Rs.57,080

gold price: இன்று, ஒரு சவரன் ஆபரணத்  தங்கம் ரூ.57,080-க்கு விற்பனையாகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக விலை உயரத் தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரமாக விலை உயர்ந்து  தங்க நகைப்  பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் சற்று விலை குறைந்து இதுக்கு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகள் தான் காரணம் சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரனுக்கு  ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன் பிறகு  டிசம்பர்-13 ஆம் தேதி முதல் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. எனவே, டிசம்பர்-16 ஒரு கிராம் தங்கம் ரூ.7,140-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,120க்கு விற்பனையானது.

நேற்று,  டிசம்பர்-17 ஒரு தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,150க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,200க்கு விற்பனையானது. இன்று டிசம்பர்-18 தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து இருக்கிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.7,135-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து இருக்கிறது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,080 க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம்  ரூ.100-க்கு.ஒரு கிலோ வெள்ளி ஒரு  லட்சமாக விற்பனையாகி வருகிறது.