இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.56,800 க்கு விற்பனையாகி வருகிறது.
இந்த வருட அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை சவரன் ரூ.59 ஆயிரமாக உச்சம் பெற்ற நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை விலையேறப் பெற்றது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக விற்பனையானது.
அதன் பிறகு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. டிசம்பர்-18 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,080 க்கு விற்பனையானது. டிசம்பர்-19 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையானது. இந்த நிலையில், டிசம்பர்-20 ஒரு கிராமுக்கு ரூ,30 குறைந்தது, எனவே ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,320 ஆக விற்பனையாகி வந்த நிலையில் டிசம்பர் 21 அன்று சற்று விலை உயர்ந்து இருக்கிறது.
அதாவது ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து இருக்கிறது. எனவே ஒரு கிராம் தங்கம் ரூ.7,100க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.56,800க்கு விற்பனையாகிறது. எனவே, டிசம்பர்- 23 விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் தங்கம் ரூ.56,800க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. எனவே, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.99க்கு, ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.99,000க்கு விற்பனையாகிறது.
வார இறுதி நாளன நேற்று தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனையாவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.