GOLD PRICE: இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.57,080 க்கு விற்பனையாகி வருகிறது.
உலக அளவில் தங்கம் வியாபாரத்தில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்து வருகிறது. இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கத்தில் தங்களது முதலீடுகளை செய்து வருகிறார்கள். தங்கம் நாளுக்கு நாள் தாறுமாறாக விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. தங்கம் வாங்குவதில் நடுத்தர குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த ஆண்டு 2024 ல் ஒரு பவுன் தங்கம் ரூ.59 ஆயிரமாக அக்டோபர் மாதம் உச்சம் பெற்றது.
இந்த நிலையில் நவம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறையத் தொடங்கியது. மீண்டும் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக உயர்ந்தது. இருப்பினும் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. அதாவது, டிசம்பர்-19 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையானது. இந்த நிலையில், டிசம்பர்-20 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,320 ஆக விற்பனையாகி வந்த நிலையில் டிசம்பர் 21 விலை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.56,800க்கு விற்பனையானது.
டிசம்பர் 24 தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,720-க்கு விற்பனையானது. டிசம்பர்-25 க்கு பிறகு விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. டிசம்பர் 26 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,000க்கு விற்பனையானது. இந்த ஆண்டு முடிவு பெறுவதால் விலை ஏறத் தொடங்கியது. நேற்று, டிசம்பர் 27 தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து இருக்கிறது. எனவே ஒரு கிராம் தங்கம் ரூ.7,150க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,200க்கு விற்பனையாகிறது.
இன்று, டிசம்பர்-28 தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 15 குறைந்துள்ளது. எனவே ஒரு கிராம் தங்கம் ரூ.7,135கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,080க்கும் விற்பனையாகிறது. இன்று, ஒரு கிராம் வெள்ளி ரூ.10 பைசா குறைந்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.99.90 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 99,900க்கு விற்பனையாகிறது.