தங்கம் விலை சற்று குறைவு !! புயலால் இன்று நகை கடைகளுக்கு விடுமுறை!!

gold price: இன்று தங்க விலை ஒரு கிராமுக்கு  10 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதில் உச்சம் தொட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.59 ஆயிரம் ஆக இருந்தது. அதன் பிறகு நவம்பர் மாத தொடக்கத்தில் தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. நேற்று தங்க விலை ஒரு  சவரன் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.57,280-க்கு விற்பனையானது.

ஒரு கிராம் தங்கம் ரூ.7,160க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்து இருக்கிறது. அதாவது  தங்கம் ஒரு கிராம் 10 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம்  57,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு
வருகிறது. ஒரு கிராம் தங்கம் 7,150 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சமாக உள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று நண்பகல் புயல் கரையை கடக்க உள்ளதால்  காலை 10 மணி முதல் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் அளித்து உள்ளது.

சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை தங்க நகை கடைகளுக்கு விடுமுறை அளித்து இருக்கிறார்கள் மெட்ராஸ் நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தினர்.