எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கு?? வாங்க பார்க்கலாம்! இன்றைய ராசிபலன் – 29.07.2020

0
63

29-07-2020, ஆடி 14, புதன்கிழமை.

இராகு காலம் மதியம் 12.00-1.30

எம கண்டம் காலை 07.30-09.00

குளிகன் பகல் 10.30 – 12.00.

இன்றைய ராசிப்பலன் – 29.07.2020.

மேஷம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ, கொடுப்பதையே தவிர்ப்பது நல்லது. மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.

ரிஷபம்

உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.வியாபாரத்தில் புதிய நண்பர்கள் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்களின் சேர்க்கை உருவாகும்.

மிதுனம்

அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நற்பலன் கிடைக்கும்.

கடகம்

தொழில் தொடர்பாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் இடையூறுகள் உண்டாகலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

சிம்மம்

உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். மனதில் குழப்பமும், கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.

கன்னி

பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும். மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஒற்றுமையாக செயல்படுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

துலாம்

தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு

பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையலாம். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்களுக்கு ஏற்ப பலன் கிடைக்கும். பணவரவு சுமாராக தான் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும்.

மகரம்

வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தாராள தனவரவும், சுபிட்சமும் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கும்பம்

உடன்பிறந்தவர்களால் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உருவாகும். தாராள பணவரவு இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மீனம்

எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். திடீர் செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் தொடர்பாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் உண்டு.

author avatar
Kowsalya