இன்று ஒரு நாள் பேசிய துக்க தினம் அனுசரிப்பு! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!

0
130

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் அந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருந்தார். அவர்தான் அந்த நாட்டின் பிரதமர் பதவியில் நீண்ட காலம் இருந்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்.

அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான நட்புறவு பரஸ்பரம் பாதுகாப்பானதாக இருந்தது.

இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் சின் ஷோ அபே நரா என்ற நகரத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். சாலைப் பகுதியில் நடந்த அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிக் கொண்டிருந்த போது ஒருவர் துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டார்.

இதில் ஷின்சோ அபேவிற்கு மார்பு பகுதியில் காயம் உண்டானது, இதனைத் தொடர்ந்து அங்கே பாதுகாப்பு பணியிலிருந்த பாதுகாப்பு படையைச் சார்ந்தவர்கள் மயக்க நிலையிலிருந்த அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ஷின்சோ அபேவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

அவருடைய மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கின்ற இரங்கல் செய்தியில் அபேவின் மறைவு சொல்ல முடியாத வருத்தத்தை வழங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

Previous articleபுனித யாத்திரை செல்லும் போது திடீர் மேக வெடிப்பு? பலி எண்ணிக்கை தொடர் அதிகரிப்பு!?..
Next articleகேஸ் சிலிண்டர் விலை குறையுமா?