தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

0
112

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. விருதுநகரில் நடந்த முதலாவது கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது. அதோடு தொடரிலும் 10 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அதே மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை இழக்காமல் இருப்பதற்காக இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது.

இதற்கு முந்தைய ஆட்டத்தில் இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. தவறுகளை சரி செய்து வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணியின் வீரர்கள் பயிற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

முன்னரே டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் கிடைத்த வெற்றி அந்த அணிக்கு கூடுதல் உத்வேகத்தை வழங்கியிருக்கிறது. ஆனாலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்துடன் இந்திய அணி இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது, இந்திய நேரப்படி பிற்பகல் 2 30 மணி அளவில் இந்த போட்டி ஆரம்பமாகிறது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, வென்டர், டுசன் உள்ளிட்டோர் சதமடித்து தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்கள். இந்திய அணியின் எந்த ஒரு வீரரும் அதுபோன்ற நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

ஷிகர் தவான், விராட் கோலி, உள்ளிட்ட ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இன்றைய தினத்தில் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்த்தால்தான் வெற்றிக்கு உதவி புரியும் விதமாக அமையும் என்று கருதப்படுகிறது.

Previous articleஇனி இவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
Next articleஅரியலூர் மாணவி விடுதியில் தற்கொலை விவகாரம்! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அளித்த விளக்கம்!