ஆதார் அட்டையில் இந்த அப்டேட்டை உடனே பண்ணுங்க; இன்று தான் கடைசி நாள்!

0
26

இந்தியாவில் உள்ள குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகின்றது. ஆதார் மட்டும் இருந்தால் போதுமானது இந்நிலையில் ஆதாரில் உள்ள விவரங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஜூன் 14ஆம் தேதி அதாவது இன்று ஆதார் விவரங்களை உடனடியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும். நாளை அப்டேட் செய்யும் நபர்கள் அனைவரும் கட்டணம் செலுத்திய அப்டேட் செய்து கொள்ள முடியும். அதனால் இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொருவரும் ஆதார் கார்டை தனிநபரின் பெயர், வயது, பாலினம், முகவரி, கைரேகை மற்றும் புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அனைத்தையும் திருத்தம் செய்து கொள்ளலாம்.

ஆதார் கார்டில் ஒரு சில நபர்களுக்கு ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை உடனடியாக திருத்தி கொள்வது அவசியம். அதனால் அரசு வழங்கக்கூடிய இலவச அப்டேட்டை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொருவரும் தங்களது ஆதாரில் உள்ள திருத்தங்களை உடனடியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Previous articleதண்ணீருக்கு தத்தளிக்கும் பாகிஸ்தான்.. சிந்து நிதி கிடைக்க வாய்ப்பே இல்லை!! மெகா பிளானை இறக்கிய இந்தியா!!!
Next article18 மாத நிலுவை தொகை; மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா!