கல்வியறிவில் முன்னணியில் இருந்து வரும் மேலை நாடுகளில் கூட மெண்டல் ஹெல்த் தொடர்பான விழிப்புணர்வு அதிகமாக காணப்படுவதில்லை. இதன் விளைவு ஒவ்வொரு வருடமும் மெண்டல் ஹெல்த் பிரச்சினைகளால் 8 மில்லியனுக்கு அதிகமான நபர்கள் உலக அளவில் உயிரிழந்து வருகிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்குவதற்காகவே மெண்டல் ஹெல்த் டே வருடம் தோறும் கடைபிடிக்கப்படுகிறது.
என்ன எப்ப பார்த்தாலும் சோகமாகவே இருக்கிறாய்? நடிக்கிறாயா? எப்போதும் டிப்ரஷன் இருக்குன்னு சொல்ற ஏமாத்துறியா? ஹார்ட் அட்டாக் கேள்விப்பட்டிருக்கேன் அது என்ன பேனிக் அட்டாக்? இப்படி பல வசனங்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கும். அல்லது நீங்களே கூட யாரையாவது பார்த்து இப்படி கேள்வி எழுப்பி இருப்பீர்கள்.
இவை அனைத்தும் மெண்டல் ஹெல்த் தொடர்பான பிரச்சனைகள். இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் நமக்கு இது தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால் இவற்றையெல்லாம் நம்மில் பலரும் பொய் என்று நம்பிக்கொண்டு உள்ளோம்.
இதன் விளைவு நம்மை சுற்றி இருக்கும் மன அழுத்தங்களால் அல்லது மன அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களையே நாம் இழப்பதற்கான சூழ்நிலை கூட ஏற்படும்.
இது போன்ற மெண்டல் ஹெல்த் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த பிரச்சனை எவ்வளவு கொடியது என்பதை உணர்த்துவதற்காகவுமே இந்த நாளை உலகம் முழுவதும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி கடைபிடித்து வருகிறோம்.
நோய் தொற்று பொதுமடக்க காலத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் உலகளவில் 8ல் ஒருவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. ஆனால் தற்போது இந்த கொரோனா நோய் தொற்று வந்து அதனை இன்னும் மோசமாக்கிவிட்டது.
அதிலும் குறிப்பாக இந்த பெருந்தொற்று ஏற்பட்ட முதல் வருடத்தில் மட்டும் முந்தைய வருடத்தை விட 25 சதவீதம் அதிகமான மக்கள் இந்த மனநல நோய்களால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. உலகளவில் 13 சதவீதம் மக்கள் தொகை சார்ந்தவர்கள் மெண்டல் ஹெல்த் பிரச்சினைகள் மற்றும் டிசாஸ்டர் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக உலக அளவில் 15 முதல் 29 வயது வரையில் இருக்கின்ற நபர்களில் தற்கொலைக்கு காரணமாக இருப்பது மெண்டல் ஹெல்த் டிசாஸ்டர் தான். உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து இன்னாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதோடு உலக அளவில் மெண்டல் ஹெல்த் பிரச்சினைகளுக்கு ஒதுக்கப்படும் மருத்துவ நிதி என்பது மிக குறைவு என்பதையும் சுட்டிக்காட்டி அனைத்து நாடுகளும் மிகத் தீவிரமாக மெண்டல் ஹெல்த் பிரச்சினைகளை அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஏன் சைட்டி டிப்ரஷன், அதிகமான மது பழக்கத்தால் குணமாற்றம் ஃபைபோலார் டிசாஸ்டர், ஸ்கிசோ பிரினியா உண்ணும் டிசாஸ்டர், பிடிஎஸ்டி, ஓசிடி உள்ளிட்டவை மெண்டல் ஹெல்த் பிரச்சினைகளில் முக்கியமான நிலைகள் என்று சொல்லப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இந்த நாளின் நோக்கம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மீது நடக்கும் மனித உரிமை மீறல் சொந்த குடும்பங்களே இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பது, தாக்குவது, வீட்டை விட்டு வெளியேற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
புதிதாக தங்களுடைய குடும்பத்தில் உங்கள் சுற்று வட்டாரத்தில் இது போன்ற யாருக்காவது ஏற்பட்டால் அவர்களை எதிர்கொள்வது சிரமமான விஷயம் தான். ஆனால் அதற்கு தயாராகிக் கொள்ள வேண்டும் அவர்களை மனித தன்மையுடன் நடத்துவதற்கான மனிதம், நிமிடம் வளர வேண்டும்.
அதேபோல மெண்டல் ஹெல்த் பிரச்சனைகள் இருப்பவர்கள் மன உறுதியுடன் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். உலகம் என்ன சிந்திக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் தங்களுடைய உலகம் நின்றுவிடும். தங்களுடைய மன ஆரோக்கியத்தை எதற்காகவும் தியாகம் செய்யாமல் நலமாக வைத்துக் கொள்வது அவசியம்.