gold price: இன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூபாய் 56,800 க்கு விற்பனையாகி வருகிறது.
இந்த வருட அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை சவரன் ரூ.59 ஆயிரமாக உச்சம் பெற்ற நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. இந்தியாவில் தங்கம் விலை குறைவதற்கு அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக இருக்கிறது எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை விலையேறத் தொடங்கியது.
டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரத்தை விற்பனையானது. அதன் பிறகு டிசம்பர்-13 ஆம் தேதி முதல் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. டிசம்பர்-18 அன்று தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.7,135-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,080 க்கு விற்பனையானது. டிசம்பர்-19 ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,560-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், நேற்று, டிசம்பர்-20 ஒரு கிராமுக்கு ரூ,30 குறைந்து இருக்கிறது. எனவே, ஒரு கிராம் தங்கம் ரூ.7,040க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,320 ஆக விற்பனையாகி வந்த நிலையில் இன்று டிசம்பர் 21 சற்று விலை உயர்ந்து இருக்கிறது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து இருக்கிறது.
எனவே, ஒரு கிராம் தங்கம் ரூ.7,100க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.56,800க்கு விற்பனையாகிறது. நேற்று, ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000க்கு விற்பனையானது. எனவே, இன்று ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.99க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.99,000க்கு விற்பனையாகிறது.