gold price: இன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.57,120க்கு விற்பனையாகிறது.
இந்த வருடம் அக்டோபர் மாதம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை சற்று ஏற்றுவது இறங்குவதுமாக இருந்தது. டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் விலை உயர்ந்தது. அதாவது ஒரு சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை குறைய தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.1,160 குறைந்து இருக்கிறது.
அதாவது, தங்கம் விலை டிசம்பர்-11 அன்று,ஒரு சவரன் ரூ. 58,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று டிசம்பர்-13 ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து இருக்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,230 க்கும் ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து இருக்கிறது.
ஒரு சவரன் தங்கம் ரூ.57,840 க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று டிசம்பர்-14 ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.90 குறைந்தது. எனவே ஒரு கிராம் தங்கம் ரூ.7,140-க்கும். ஒரு சவரனுக்கு ரூ.720 குறைந்து இருக்கிறது. அதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,120க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.
இன்று, டிசம்பர்-16 விலையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவே ஒரு சவரன் தங்கம் ரூ.57,120க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.100-க்கு.ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சமாக விற்பனையாகி வருகிறது.