நீங்க இந்த ராசியா? உங்களுக்கு அதிஷ்டம் கொட்டப்போகுது!

0
271

மேஷம்

மதிப்பும் மரியாதையும் அதிகமாகும் சவாலான காரியங்களையும் எளிதில் வெற்றி காண்பீர்கள், பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவு பெறுவதற்கான வாய்ப்புகளுண்டு பணத்தேவைகள் கடைசி சமயத்தில் பூர்த்தியாகும்.

ரிஷபம்

செல்வந்தர்களை சந்திப்பதால் பல மாற்றங்கள் நிகழும், இதனால் இந்த நாள் சிறப்படையும், கடிதம் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும், நண்பர்கள் சரியான சமயத்தில் உதவி புரிவார்கள் வெளிவட்டாரத் தொடர்பு விரிவடைவதற்கான வாய்ப்பிருக்கிறது.

மிதுனம்

இந்த நாள் யோகமான நாளாக அமையப்பெறும் சகோதர, சகோதரிகளின் வழியில் எதிர்பார்க்கும் உதவி கிடைப்பதற்கான வாய்ப்புண்டு குடும்பத்தில் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு புதியதொரு திட்டத்தை கையாளுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனையொன்று சுமுகமான முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புண்டு.

கடகம்

பணவரவு அதிகமாகவிருக்கும் நண்பர்கள் வட்டாரம் பெரிதாகும், பணியாற்றுமிடத்தில் உயர்ந்த நிலையை அடையும் சந்தர்ப்பம் ஏற்படும் குடும்பத்திற்கு தேவைப்படும் பொருட்களை மகிழ்வுடன் வாங்குவீர்கள்

சிம்மம்

துன்பங்கள் மறையும் நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் அலுவலகப் பணிகள் வேகமாக நடைபெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. அறிவாற்றல் மிக்கவர்கள் ஒத்துழைப்பு காரணமாக தொழிலில் முன்னேற்றமடைய வாய்ப்பிருக்கிறது.

கன்னி

மனதிலுள்ள குழப்பங்கள் நீங்கும் கடினமான முயற்சிக்கு பிறகு எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் உண்டான வாக்குவாதங்கள் நீங்கும் நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும்.

துலாம்

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் வருமானம் திருப்தியாக இருக்கும் வீட்டில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். வெளிநாட்டு பயணங்கள் செல்வதற்கு போட்ட திட்டம் நிறைவேறுவதற்கு வாய்ப்புண்டு.

விருச்சிகம்

பாராட்டுக்கள் கிடைக்கும் நாள் புகழ் அதிகரிக்கும் அதோடு பலர் பக்கபலமாக இருப்பார்கள் நீங்கள் கேட்ட உதவியை உடனடியாக செய்து தருவார்கள். பூமி மற்றும் இடம் காரணமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய எடுத்த முயற்சி வெற்றியடையும்.

தனுசு

தெய்வ வழிபாட்டால் வளர்ச்சியடையும் நாள் ,செலவு அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு, குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும். விலை மதிப்புமிக்க பொருட்களை வாங்கிய பின்னரும் திருப்தி இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம்.

மகரம்

புத்துணர்ச்சியுடன் தொடங்கும் நாள் மதியத்திற்கு மேல் குழப்பம் அதிகரிக்கலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் செல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி தாமதபடுவதற்கான வாய்ப்புண்டு.

கும்பம்

தொலைபேசி மூலமாக வருத்தமான தகவல் வரலாம்.நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறுவதற்கான வாய்ப்புண்டு நல்ல வாய்ப்புகள் தேடிவரும் பணப்பற்றாக்குறை நீங்கும் உங்களை உதாசீனம் செய்தவர்கள் உங்களை கண்டு பெருமை படுவார்கள்.

மீனம்

கடன்கள் வசூலாகி மகிழ்ச்சி தரும் நாள், பிள்ளைகளின் வேலை வாய்ப்பு கருதி எடுக்கப்பட்ட முயற்சி வெற்றியடையும் வீடு மற்றும் இடம் வாங்குவது தொடர்பாக சிந்திப்பீர்கள். உறவினர்கள் உங்களை மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

Previous articleஅஜித்தின் சமீபத்திய புகைப்படம்! இணையத்தில் வைரல்!!
Next articleசெவ்வாய் விரதத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here