குறுக்கு வழி அரசியல் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். குறுக்கு வழி அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
ஜார்கண்ட் மாநிலம் தியூகரில் 2018 ஆம் வருடம் தீவிரல் விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று நடந்தது.
இதில் பங்கேற்றுக் கொள்வதற்காக ஜார்கண்ட் சென்ற பிரதமரை நரேந்திர மோடி தியோகர் நகரில் 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை மார்க்கமாக பயணம் செய்தார். அப்போது வழி நெடுகிலும் பிரதமர் காரின் கதவை திறந்து நின்றபடியே கையோசைத்து சென்றார் என சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட தியோகர் நகர் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதோடு தியோகர் ,கல்கத்தா இடையிலான இண்டிகோ விமானத்தின் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனை அடுத்து திவாகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கல் சேவைகளையும், பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார். இதோடு மட்டுமல்லாமல் 16,800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களையும் அவர் ஆரம்பித்து வைத்தார்.
இதன் பிறகு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மட்டுமின்றி இந்த திட்டங்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்கும் பயன் தரும் என்று தெரிவித்தார். தியோகர் விமான நிலையம் தங்களுடைய நீண்ட கால கனவு என்றும் அது தற்போது நிறைவேறியிருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
குறுக்கு வழி அரசியல் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். குறுக்கு வழி அரசியல் ஒட்டுமொத்த நாட்டையும் நாசமாக்கிவிடும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களை பிரதமர் நரேந்திர மோடி குறுக்கு வழி அரசியல் என்று விமர்சனம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.