இன்று ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்!!

0
50

இன்று ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்…

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(ஆகஸ்ட்2) வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், தமன்னா, ஜேக்கி ஷெருப், யோகி பாபு, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஜெயிலர் தியைப்படம் இந்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்2) இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம். காத்திருப்பு முடிந்துவிட்டது. அவன்(ர்) வருகிறான்(ர்). ஜெயிலர் ஷோகேஸ்(showcase) நாளை(ஆகஸ்ட்2) வெளியாகிறது” என்று கூறி இறுதியில் கேள்விக் குறி ஒன்றையும் பதிவிட்டுள்ளது.