படிப்படியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளி விலை! கிலோவிற்கு 400 குறைந்தது வெள்ளி!

0
251

மத்திய வங்கி தனது மாதாந்திரக் கூட்டத்தில் எடுத்த முடிவில் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான செய்தியை வலுபடுத்தியதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வருவதாக தெரிகிறது. வெள்ளி விலையை மேலும் குறைத்துள்ளது .நேற்று தங்கம் ஏறத் தொடங்கும் என்று நம்பிய பங்குதாரர்கள் நிறைய பேர் சரிவை சந்தித்தது சொல்லப்படுகிறது.
நேற்று வெளியான unemployment Claims என்ற செய்தி தங்கம் மற்றும் வெள்ளி விலை ஓரளவு குறி வைத்துள்ளதாக தெரிகிறது.

மேலும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இன்றைய தங்கத்தின் விலை;

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து
ரூ.4445க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.35560-க்கு விற்கப்படுகிறது.

படிப்படியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளி விலை! கிலோவிற்கு 400 குறைந்தது வெள்ளி!
சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 ரூபாய் குறைந்து ரூ.4804-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 60 குறைந்து ரூ.38432-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

உயர்ந்த உலோகங்கள் அனைத்தும் வீழ்ச்சியை கண்டுள்ளது. வெள்ளி கடந்த ஒரு வாரமாகவே குறைந்து வருகிறது. இது அமெரிக்க டாலரில் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. வெள்ளி ஒரு கிராம் 0.40 காசுகள் குறைந்து 73.40விற்க்கும், ஒரு கிலோ ரூ. 73400 க்கும் விற்கப்பட்டு வருகிறது. கிலோவிற்கு 400 ரூபாய் குறைந்துள்ளது வெள்ளி.

படிப்படியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளி விலை! கிலோவிற்கு 400 குறைந்தது வெள்ளி!
அனைவரும் தங்கத்தின் மீது உள்ள முதலீட்டை அதிகபடுத்தி வருகின்றனர். அமெரிக்க டாலர்கள் வலு பெற்றுள்ளதால் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான ஒருசில சமிக்கைகளை வெளியிட்டதால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிந்தன. இந்த செய்திகள் அமெரிக்க டாலரை வலுக்க செய்வதால் சர்வதேச சந்தைகளில் பலவீனமான நிலையை தங்கம் மற்றும் வெள்ளி காண்பிக்கின்றன.ஆனால் சடார் என்று கீழே விழும் தங்கம் ஏற்றத்தை காணும் வாய்ப்பு அருகில் உள்ளது என்று பங்குதாரர்கள் கூறுகிறார்கள்.

Previous article“நார பயலே செத்த பயலே” டிக் டாக் பிரபலம் “ஜி பி முத்துவுக்கு” எதிராக புகார்!
Next articleஅமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளும் நாட்கள் தொலைவில் இல்லை- முதல்வரின் அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here