இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் தொழிலில் கவனம் தேவை ! இன்றைய ராசி பலன் 09-10-2020 Today Rasi Palan 09-10-2020

0
96

இன்றைய ராசி பலன்- 09-10-2020

நாள் : 09-10-2020

தமிழ் மாதம்: 

புரட்டாசி 23, வெள்ளிக்கிழமை,

நல்ல நேரம்: 

காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை.

இராகு காலம்: 

பகல் 10.30 முதல் 12.00 வரை

 எம கண்டம்: 

மதியம் 3.00 முதல் 4.30 வரை

 குளிகன்: 

 காலை 7.30 முதல் 9.00 வரை

திதி: 

சப்தமி திதி மாலை 05.50 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.

நட்சத்திரம்: 

  திருவாதிரை நட்சத்திரம் இரவு 12.26 வரை பின்பு புனர்பூசம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினை தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும் வாய்ப்பு உண்டு. தொழில் வியாபாரத்தில் அமோகமான லாபம் பெருகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று சிலருக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லதை தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் சந்தோஷம் பெருகும் நாள். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பொன் பொருள் சேரும். உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புத்துணர்ச்சியை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். உங்களுக்கு மன அமைதி குறையும். பயணங்களில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று நீங்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் முடிந்த வரை பொறுமையுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று உங்களின் பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும்.

 

 

author avatar
Kowsalya