இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! முக்கியமான போட்டியில் டெல்லிக்கு எதிராக பஞ்சாப் அணி இன்று பலப்பரீட்சை!!

Photo of author

By Sakthi

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! முக்கியமான போட்டியில் டெல்லிக்கு எதிராக பஞ்சாப் அணி இன்று பலப்பரீட்சை!
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்  புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முக்கியமான போட்டியாகும்.
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால் ஏற்கனவே 12 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி 4வது அல்லது 5வது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
அதனால் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறுவது கட்டாயம். டெல்லி அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி விட்டாலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து சிறிது முன்னேற நினைக்கும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
டெல்லி கேபிடல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதும் இன்றைய போட்டி தர்மசாலா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.