இன்றைய ஐபிஎல் போட்டி! வென்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி!!

0
187
#image_title
இன்றைய ஐபிஎல் போட்டி! வென்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி!
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பாப் டுபிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கட்டயாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது.
12 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இனைய போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இதனால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறப் பார்க்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி போட்டியில் தோல்வியடைந்ததால் இந்த போட்டியில் வெற்ற பெற பார்க்கும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் ராஜிவ் காந்தி இன்டர்நேஷ்னல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்றைய போட்டியால் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறும்.
Previous articleதளபதி68 படத்தின் முக்கிய அறிவிப்பு! கதை எழுதும் பணியில் இயக்குநர் வெங்கட் பிரபு!!
Next articleபிக்பாஸ் ஜெயித்தால் மட்டும் வாய்ப்புகள் வராது! நடிகர் ஆரவ் அவர்கள் பேட்டி!!