ஐபிஎல் இன்றைய போட்டி! மும்பை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை!!

Photo of author

By Sakthi

ஐபிஎல் இன்றைய போட்டி! மும்பை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை!!

Sakthi

ஐபிஎல் இன்றைய போட்டி! மும்பை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.
இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடவுள்ளது. இன்று நடக்கும் போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாகும்.
இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஃபாப் டுபிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இரண்டு அணிகளிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என குறை சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.
இன்று நடக்கும் இந்த போட்டியில் வெற்றி என்பது இரண்டு அணிகளுக்குமே முக்கியமா தேவைப்படும். அதனால் இரண்டு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்கவுள்ளது.
இரண்டு அணிகளும் 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 6வது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி 8வது இடத்திலும் இருக்கின்றது. இன்று நடைபெறும் போட்டியால் வெற்றி பெறும் அணா 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறும்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும். இந்த பரபரப்பான போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகின்றது.