இன்றைய ஆன்மீகத் தகவல்கள்..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகள்..!!

Photo of author

By Janani

இன்றைய ஆன்மீகத் தகவல்கள்..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகள்..!!

Janani

1. பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வையுங்கள்.. அஷ்டலட்சுமியின் வருகை இருக்கும்:

*அதிகாலையில் சூரியன் உதயமாகும் நேரமும் சூரியன் மறையும் நேரமும் மிகவும் முக்கியமான நேரம் ஆகும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமது வீட்டின் கதவை திறக்கும் பொழுது, ஒரு மந்திரத்தை 8 முறை கூறிவிட்டு அதன் பிறகு திறந்தோம் என்றால், அஷ்ட லட்சுமிகளின் வருகை நமது வீட்டிற்கு கண்டிப்பாக இருக்கும்.

*ஒரு வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், வெறும் பணத்தால் மட்டும் கிடைத்து விடாது. பணத்தோடு சேர்ந்து மற்ற ஐஸ்வர்யங்களும் நமது வீட்டிற்கு கிடைக்க வேண்டும்.

*தினமும் நமது வீட்டின் கதவை திறக்கும் பொழுது அஷ்ட லட்சுமிகளின் வருகையும் எங்களது வீட்டிற்கு இருக்க வேண்டும் என மனதில் நினைத்து “ஸ்ரீம்” என்ற மந்திரத்தை 8 முறை கூற வேண்டும்.

2. மளிகை பொருட்களை எந்த நாளில் வாங்கலாம்:

*பூரம், அனுஷம், உத்திரட்டாதி, பரணி, பூசம், பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் மற்றும் செல்வ செழிப்பும் பெருகும்.

*மளிகை பொருட்களை சமையலறையில் மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைத்தால் சுபிட்சம் ஏற்படும். தினமும் குளித்துவிட்டு பூஜை அறைக்குள் செல்வதைப் போன்று, சமையல் அறைக்குள் சென்றோம் என்றால் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும்.

3. வீட்டில் தினமும் கற்பூரம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்:

*தினமும் பூஜை செய்யும் பொழுது கற்பூரம் ஏற்றுவதனால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியும், செல்வமும் கிடைக்கும்.

*கற்பூரத்தை தினமும் வீட்டில் ஏற்றுவதால் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைந்து செல்வத்தையும், மகிழ்ச்சியையும் தருவார்.

*தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் கற்பூரத்தை ஏற்றுவதால் தொழில் செழிப்படையும்.

*கற்பூரத்துடன் கிராம்பை சேர்த்து எரிப்பதால் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி விலகும்.

4. திருமண யோகத்தை தரக்கூடிய பங்குனி உத்திர பூஜைகள்:

*பங்குனி மாதத்தில் வரக்கூடிய பங்குனி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய நாள் தான் பங்குனி உத்திரம்.

*பங்குனி உத்திர நாளில் திருமண வரம் வேண்டுவோர், வேலை கிடைக்க வேண்டும் என்றும், கடன் தீர வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்.

*பங்குனி உத்திர நாள் அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

*இந்நாளில் விரதம் இருந்து சிவபெருமான் சன்னதிக்கும், முருகப்பெருமான் சன்னதிக்கும் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

5. சனிக்கிழமை நாட்களில் இந்த இடங்களில் விளக்கேற்றுங்கள்:

*வாஸ்துபடி சனிக்கிழமை நாட்களில் அரச மரத்தின் அடியில் விளக்கு ஏற்றுவது புனிதமாக கருதப்படுகிறது. மத நம்பிக்கைகளின் படி சனிக் கிழமைகளில் மரத்தின் அடியில் விளக்கேற்றினால் உங்களது விருப்பங்கள் நிறைவேறும் மற்றும் மகிழ்ச்சி, செழிப்பை காண்பீர்கள்.

6. கண் திருஷ்டி விலக:

*ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் ஊர் அடங்கிய பிறகு ஒரு வெள்ளை துணியில் வெண்கடுகு, பச்சைக் கற்பூரம், கல் உப்பு, காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.

*இதனை நல்லெண்ணெயில் நனைத்து நம் வீட்டு வாசப்படி அருகில், தெருவில் இதை போட்டுக் கொளுத்த வேண்டும். இந்த மூட்டை முழுவதும் எரிந்து முடிந்தால் வீட்டில் இருக்கும் ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி ஆகிய அனைத்தும் விலகும்.