டோக்கியோ ஒலிம்பிக்: வரலாற்றுச் சாதனை படைத்த வீர மங்கை!! 7 பதக்கங்களை வென்று சாதனை !!

Photo of author

By Preethi

டோக்கியோ ஒலிம்பிக்: வரலாற்றுச் சாதனை படைத்த வீர மங்கை!! 7 பதக்கங்களை வென்று சாதனை !!

 

டோக்கியோவில் நடந்து கொண்டு இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை தெரியப் படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனையான ஏம மெக்கியன் என்பவர் ஒலிம்பிக் வரலாற்றிலேயே இதற்கு முன் இல்லாத சாதனையை படைத்துள்ளார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் நீச்சல் பிரிவில் மொத்தம் 7 பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 400 மீட்டர் நீச்சல் ரிலே போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீராங்கனைகளான கையிலே மிக்கோன், செல்ஃபி ஹாட்ஜாஸ், ஏம மெக்கியன், கேட் கேம்பெல் ஆகியோர் 3:51:60 என்ற மைக்ரோ வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து தங்கப் பதக்கம் வென்றனர். இது உட்பட 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டி, 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல் ரிலே நீச்சல் போட்டி 400 மீட்டர் மெட்லே ரிலே நீச்சல் போட்டி மற்றும் 50 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டி ஆகிய போட்டிகளில் ஏம மெக்கியன் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இரட்டையர் 400 மீட்டர் மெட்லி ரிலே நீச்சல் போட்டி, 100 மீட்டர் ஃபட்டர்பிளை நீச்சல் போட்டி மற்றும் 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் ஆகிய போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை இவர் வென்றார். இவர் மொத்தம் 4 தங்கம் உட்பட 7 பதக்கங்களை வென்றுள்ளார்.

 

இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஒரே வீரர் 6 பதக்கங்கள் வரை தான் வென்றுள்ளனர். 1952ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி சேர்ந்த வீராங்கனையான கிறிஸ்டின் ஓட்டோ அவர்கள் ஒரே ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களையும், 2008இல் அமெரிக்க வீராங்கனையான நடாலி காப்லின் அவர்கள் ஒரே ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளனர். ஆனால் ஏம மெக்கியன் ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வென்று இதற்கு முன் படைத்த சாதனையை முறியடித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா இதுவரை 14 தங்கம் 3 வெள்ளி 14 வெண்கலம் வென்று 31 பதக்கங்களுடன் நான்காம் இடத்தில் இருக்கிறது. 24 தங்களுடன் சீனா முதலிடத்திலும், 20 தங்கம் உட்பட மொத்தம் 53 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், 17 தங்கம் உட்பட 31 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடத்திலும் உள்ளன.