டோக்கியோ ஒலிம்பிக்: சாதனைப் பெண்கள் தான்!! கால் இறுதிக்கு கூட தகுதி இல்லாதவர்கள்!! மகளிர் ஹாக்கி அணி யினர்!!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி வரை கூட முன்னேறாது என வல்லுனர்கள் பலரால் கணிக்கப்பட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியானது தங்கம் வெல்லும் என கணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சர்வதேச அரங்கையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. எளிதில் வீழ்த்தி விடக்கூடிய அணி என்று டோக்கியோ ஒலிம்பிக் முன்னரே சர்வதேச வல்லுனர்களால் மிகவும் சாதாரணமாக எடை போடப்பட்டது இந்திய மகளிர் ஹாக்கி அணி விமர்சனங்களுக்கு ஏற்ப லீக் சுற்றில் முதல் போட்டிகளையும் இழந்தனர் இந்திய மகளிர் ஹாக்கி அணி. கடுமையான சாடல்களும் கெளிகளும் நெட்டிசன்களின் விமர்சனங்களும் மகளிர் ஹாக்கி அணியின் மீது வீச தொடங்கியது. வீராங்கனைகளின் மீது விமர்சனங்களாக பற்றி எரிந்தது. ஆனால் அதெல்லாம் வரலாறு படைப்பதற்கான சுடர்தான் என்று அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
மூன்று தொடர் தோல்விகளுக்கு பின்னர் மன உறுதியுடன் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளை வென்று அரையிறுதி வரை முன்னேறி அனைவரையும் வியப்பை ஏற்படுத்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி. தேச தரவரிசையில் ஒன்பதாவது இடத்திலுள்ள இந்திய அணி காலிறுதி ஆட்டத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள உலகின் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. மோசமான தோல்வியை தவிர்ப்பது மட்டுமே இந்தியாவிற்கான இலக்கான இருக்கும் என பேசப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தேன் களத்திலிருந்து அனல் பறந்தது. ஆட்டத்தின் முதல் கால் பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை இரண்டாவது கால் பகுதியில் 22வது நிமிடத்தில் இந்தியாவின் வீராங்கனை ஒரு கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப் படுத்தினார். அதன் பின்னர் ஆஸ்திரேலியாவின் கோல் முயற்சிகளை தவிடு பொடியாக்கியது இந்திய மகளிர் ஹாக்கி அணி. மூன்றாவது கால் பகுதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் நான்காவது கால் பகுதியில் கோல் அடித்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடிக்கு உள்ளானது ஆஸ்திரேலிய அணி. இந்தியாவின் தடுப்பால் ஆட்டத்தில் மிரண்டது ஆஸ்திரேலிய அணி.கடைசி 7 நிமிடங்களில் ஆக்ரோஷமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி பார்த்தது. ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
ஆட்டத்தின் 58 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவிற்கு பொன்னான வாய்ப்பான பெனால்டி கிடைத்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் ஏழு நாட்களையும் தடுத்த இந்தியாவின் வீராங்கனை சபிதா எட்டாவது பெனால்டி ஐயும் முறியடித்தார். மத்திய கல வீராங்கனைகளும் ஆஸ்திரேலியா வீராங்கனைகளை திக்குமுக்காட வைத்தனர். ஒட்டுமொத்த கடின உழைப்பின் பலனாக 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அந்த கண்ணீர் கடலில் மூழ்கியது இந்தியா. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளது இந்திய மகளிர் ஹாக்கி அணி. அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அர்ஜென்டினா மகளிர் ஹாக்கி அணியுடன் மோதியது இதில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இருந்தாலும் இந்த பெண்களை சாதனைப் பெண்கள் ஆகவே இந்தியர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றார்கள். கால் இறுதிவரை கூட தகுதி பெறமாட்டார்கள் என்று அனைவராலும் கூறப்பட்ட பெண்கள் அரையிறுதி வரை சென்று சாதனை படைத்தது போற்றத்தக்கது. இவர்கள் இந்தியாவின் வீரமங்கைகள் தான்.