டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் அதிக நம்பிக்கை!! ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா!! பதக்கம் வெல்வாரா??
டோக்கியோ ஒலிம்பிகில் இந்திய நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 23 வயதான இவர் தடகளத்தில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக உள்ளார். இவர் தற்போது உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளார். இவர் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஆயத்தங்கள் குறைவாக இருந்ததால் ஒரே ஒரு உயர்தர சர்வதேச போட்டியில் மட்டுமே பங்கேற்றார். இந்தியா, தடகள கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி மற்றும் போட்டி சுற்றுப்பயணங்களை திட்டமிட்டது. ஆனால் தொற்றுநோயின் காரணமாக உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அவற்றை ரத்து செய்ய வேண்டியிருந்தது.
26 உறுப்பினர்களைக் கொண்ட ஒலிம்பிக் அணியில், சோப்ராவால் மட்டுமே டோக்கியோவுக்கு வருவதற்கு முன்பு ஜூன் மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் பயிற்சியளிக்கப்பட்டு போட்டியில் கலந்துக்கொள்ள முடிந்தது. ஒலிம்பிக்கிற்கு முன்பு அவருக்கு மூன்று சர்வதேச போட்டிகள் இருந்தன. ஆனால் அதில் முதல் இரண்டும் உள்ளூர் விளையாட்டு வீரர்கள் போட்டியிடும் சிறியஅளவிலான போட்டிகள். இந்த ஆண்டு நிகழ்ந்த தனது ஒரே உயர்தர சர்வதேச போட்டியில், சோப்ரா பின்லாந்தில் நடந்த கோர்டேன் விளையாட்டுகளில் 86.79 மீ தூரத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
மார்ச் மாதத்தில் நடந்த இந்திய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 88.07 மீ தூக்கி எறிந்து தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் சோப்ரா. இவர் 2017 உலக சாம்பியன் வெட்டர் போட்டியில் தனிநபர் பிரிவில் சிறந்த தூரமான 97.76 மீ வீசினார் மேலும், அந்த சீசனின் –சிறந்த தொலைவான 96.29 மீ தூரம் எறிந்தார். இந்த சீசனில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே ஏழு நிகழ்வுகளில் 90 மீ பிளஸ் வீசுதல் மூலம் தோற்கடிக்க முடியாதவராக இருந்தார்.எனவே இந்தியா இவர் மீது நம்பிகள் அதிக மக இருந்தது.