டோக்கியோ ஒலிம்பிக்: நான் தங்கம் வெல்வேன்!! குத்து சண்டை வீராங்கனை லவ்லினா!!

Photo of author

By Preethi

டோக்கியோ ஒலிம்பிக்:  நான் தங்கம் வெல்வேன்!! குத்து சண்டை வீராங்கனை லவ்லினா!!

இந்தியா அடுத்த பதக்கம் உறுதியானது. இது வெள்ளியிலிருந்து தங்கமாக மாற வாய்ப்புள்ளது. ஒருவேளை அதைவிட பெரியதாக கூட இருக்கலாம். குத்து சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் இன்று செய்த செயலிற்கு நாடெங்கும் பாராட்டுக்கள் குவிந்தது. டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் குத்துச்சண்டை ரிங் இன்று அலறல் கலமாக இருக்கும். மேலும் அந்த நிகழ்வு இந்தியாவின் நம்பிக்கையையும் கூட்டும். டோக்கியோவில் நடந்த 69 கிலோ எடை பிரிவில் பெண்கள் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான நீன்-சின் சென்-ஐ இந்திய வீராங்கனை லவ்லினா வீழ்த்தி அறையிறுதிக்குள் நுழைந்தார்.

 

அரையிறுதி போட்டிக்கு முன்பு லவ்லினா கூறியதாவது: “இன்னும் ஒரு பதக்கம் மட்டுமே மீதம் உள்ளது, அது தங்கம் மட்டும் தான், நான் தங்கம் வெல்ல விரும்புகிறேன்.” என்றார். லவ்லினா 2012 இல் தான் குத்துச்சண்டையை தொடங்கினார், அந்த வருடம் தான் மேரி கோம் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் குத்துச்சண்டை பதக்கத்தை வென்றார். லவ்லினாவின் வெண்கல பதக்கத்தின் உண்மையான தாக்கம் மற்றும் வாக்குறுதிகள் இன்று நிறைவேற்றப்பட்டது.  இவர் அக்டோபர் 2 1997 இல் பிறந்தார். அசாமின் கோலாகாட்டில் உள்ள பரோ முகியா கிராமத்தில் தான் வளர்ந்தார். அப்பொழுதுஅங்கு சாலைகள் இல்லை, குழாய் நீர் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை.

 

அதன்பிறகு ஆண்டுகள் செல்ல சில மாற்றம் உருவானது. அவரது தந்தை மகளின் லட்சியத்தை ஆதரிக்க நிதியை ரீதியாக பெரிதும் போராடியுள்ளார். அவரது மூத்த சகோதரிகளான லிச்சா மற்றும் லிமா என்ற இரட்டையர்கள் மற்றும் அவரின் தாய் ஆகியோர் தான் லவ்லினாவின் முதல் காதல். மேலும் அவரது மூத்த சகோதரிகள் இருவரும் தேசிய அளவில் பாக்ஸிங்கில் போட்டியிட்டனர். ஆனால் அதன் பிறகு அவர்கள் அதை தொடரவில்லை. முதலில் லோ லீனாவும் கிக் பாக்சிங் தான் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார் ஆனால் அவருக்கு குத்துச் சண்டைக்கு வாய்ப்பு கிடைத்த போது அவள் குத்துச் சண்டைக்கு மாறினார். இவர் ஒரு முறை தேசிய துணைநிலை சாம்பியனாக இருந்தார். லவ்லினாவின் இந்த பதக்கம் அவரின் கிராமத்தின் அதிர்ஷ்டத்தை மாற்றும் என்று அந்த கிராம மக்கள் நம்புகின்றனர்.