டோக்கியோ பாரா ஒலிம்பிக்! இந்திய வீராங்கனை பவினா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

0
116

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பதினாறாவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விளையாட்டுப் போட்டிகளில் 162 நாடுகளைச் சார்ந்த 4 ஆயிரத்து நானூற்று மூன்று வீரர் வீராங்கனைகள் பங்கேற்க இருக்கிறார்கள் முதல் நாள் அன்று தொடக்கம் மட்டுமே நடைபெற்றது.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் 16-வது அமர்ந்த நிலையில் ஜாய்ஸ்டி ஒலிவியராவுடன் நேற்று விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவினா கால் இறுதிப்போட்டிக்கு தகுதி அடைந்தார்.

இதனை அடுத்து காலிறுதி போட்டியில் செர்பியா வீராங்கனையை எதிர்த்து விளையாடிய இந்திய வீராங்கனை பவினா 11க்கு -5- 11 -6 -11 -7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதன் பின்னர் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சீனாவின் விழாவுக்கு எதிராக விளையாடிய பவீனா பட்டேல் 3-2 என்ற செட் கணக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இந்தியாவுக்கான பதக்கம் வெல்லும் வாய்ப்பு தற்சமயம் அதிகரித்து இருக்கிறது.

Previous articleஇந்த வயதிலும் சும்மா கும்முன்னு கவர்ச்சி புகைப்படம் பதிவிட்ட நடிகை!
Next articleமுக்கிய வீரர் மீதான விமர்சனத்திற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த ரோகித் சர்மா!