டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள்! இந்தியாவின் பவீனா படேல் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

Photo of author

By Sakthi

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பமானது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 162 நாடுகள் மற்றும் 4 ஆயிரத்து நானூற்று மூன்று வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடைபெற்றது.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் 4-வது நாளான இன்றைய தினம் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா படேல் அமர்ந்த நிலையில் ஜாய்ஸ்டி ஒலிவியராவுடன் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவீனா காலிறுதிப் இறுதிப்போட்டிக்கு தகுதி அடைந்திருக்கிறார்.