பாரா ஒலிம்பிக் போட்டி! வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்!

Photo of author

By Sakthi

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்றைய தினம் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.

பிரிட்டன் வீரருடன் நடைபெற்ற கடுமையான போட்டிக்குப் பின்னர் 2.07 மீட்டர் உயரம் தாண்டி பிரவீன்குமார் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற 18 வயதேயான பிரவீன்குமார் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

பிரிட்டன் வீரர் ஜோனதன் உடன் மிகக் கடுமையான போட்டி நிலவியது. இதில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் பிரவீன்குமார் இழந்திருக்கிறார். பாராலிம்பிக் போட்டியில் 2.10 மீட்டர் உயரம் தாண்டி பிரிட்டன் வீரர் ஜோனாதன் தங்க பதக்கம் வென்றிருக்கிறார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாராலிம்பிக் தொடரின் 2 தங்கம் 6 வெள்ளி 3 வெண்கலம் என்று பதினொரு பதக்கங்களை இந்தியா கைப்பற்றியிருக்கிறது.