Tomato Biryani: தக்காளி பிரியாணி ட்ரை பண்ணி பாருங்க..! அப்புறம் விடவே மாட்டீங்க..!

Photo of author

By Priya

Tomato Biryani: பலருக்கும் உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டால் சிறிதும் யோசிக்காமல் பிரியாணி தான் என்று கூறுவார்கள். சைவம் விரும்பி சாப்பிடுபவர்கள் கூட வெஜ் பிரியாணி என்றால் கூடுதலாக ஒரு கரண்டி சாப்பிடுவார்கள். பலருக்கும் இங்கு பிரியாணி என்றால் உணர்வாக தான் உள்ளது. அந்த வகையில் பிரியாணியில் நிறைய வகைகள் உள்ளன. மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன் பிரியாணி என்று பல வகைகள் இருக்கின்றன.

ஒரு முறை இந்த தக்காளி பிரியாணியை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது.

தேவையான பொருட்கள் 

  • பெரிய வெங்காயம்  – 2 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2
  • தக்காளி – 4
  • பாஸ்மதி அரிசி – 1 கப்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
  • தயிர் – 1/4 கப்
  • சீரகம்- 1 டீஸ்பூன்
  • பட்டை-1
  • கிராம்பு-1
  • பிரியாணி இலை -1
  • ஏலக்காய் -1
  • கரம்மசாலா- 1ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
  • பிரியாணி மசாலா – 1ஸ்பூன்
  • மஞ்சள் தூள் –  தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • புதினா, கொத்தமல்லை – சிறிதளவு
  • எண்ணெய் -தேவையான அளவு
  • நெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் ஒன்றை வைத்து தேவையான அளவு எண்ணெய், சிறிதளவு நெய் ஊற்றி காய வைக்க வேண்டும். பிறகு அதில் சீரகம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.

அதன் பிறகு அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் வதக்கி கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாடை போகும்வரை வதக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அதில் கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு தக்காளியை நறுக்கி அதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

வதங்கிய தக்காளியில் ஒரு ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா, தேவையான அளவு மஞ்சத்தூள் போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.

பிறகு எடுத்து வைத்துள்ள கால் கப் தயிர் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது மீதி இருக்கும் இரண்டு தக்காளியை இரண்டு, மூன்றாக வெட்டி அதில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.

தற்போது ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு 1.5 கப் (ஒன்றரை) என்ற விதத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் கொதித்ததும் தேவையான அளவு உப்பு போட்டு பாஸ்மதி அரிசியை அதில் போட்டு கிளறி விட வேண்டும்.

அரிசி முக்கால் பதம் வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து
தம் போட்டு ஐந்து நிமிடம் கழித்து நெய் ஊற்றி இறக்கினால் சுவையான தக்காளி பிரியாணி தயார்.

மேலும் படிக்க: Kollu Benefits in tamil: கொழுப்பை குறைக்கும் கொள்ளு..! யார் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது?