Tomato Facial: அனைவருக்கும் தங்களின் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான். அதனால் ஒரு சில நபர்கள் பியூட்டி பார்லர் சென்று தங்களின் முகங்களுக்கு ஏற்றவாறு சிகிச்சை மேற்கொண்டு அதன் மூலம் பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவை வராமல் தடுப்பார்கள். இதற்காக அவர்கள் அதிக அளவில் பணம் செலவழித்துக் கொள்வார்கள். மேலும் இந்த சிகிச்சை அவர்கள் தொடர்ந்து செய்யவில்லை என்றால் மீண்டும் அவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் நம் வீட்டில் கிடைக்கக்கூடிய இயற்கையான பொருட்களை மட்டும் வைத்து எப்படி நம்முடைய முகத்தினை அழகாக மாற்றிக் கொள்ளலாம் என்று நாம் இந்த பதிவில் (Tomato Facial at home in Tamil) காண்போம்.
தக்காளியில் உள்ள வைட்டமின் சி நம் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை அகற்றும் தன்மை கொண்டது. மேலும் இந்த தக்காளி ஜூஸ் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
பியூட்டி பார்லர் செல்லாமல் வீட்டில் இருக்கும் தக்காளியை வைத்து மற்றும் வீட்டில் இருக்கும் மற்ற பொருட்களை வைத்தும் எளிமையான முறையில் மிகவும் தக்காளி பேஷியல் செய்யலாம். இதன் மூலம் நம் சருமத்திற்கு இயற்கையான முறையில் பேசியல் செய்தது போன்ற ஒரு பொலிவு கிடைக்கும்.
படி: 1
பேசியல் செய்வதற்கு முன்பு நம்முடைய முகத்தை முதலில் Cleansing செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு சிறிய பௌலில் இரண்டு ஸ்பூன் தக்காளி ஜூஸ் மற்றும் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும்பால் இவை இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு உங்கள் முகத்தை நன்றாக கழுவி விட்டு ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டு இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நம் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி முகம் பளிச்சென்று மாறும்.
படி: 2
இரண்டாவதாக நம்முடைய முகத்திற்கு ஸ்கிரப்பிங் செய்ய வேண்டும் இதற்கு ஒரு தக்காளி பழத்தை நன்கு கழுவி அதை இரண்டாக நறுக்கி அந்த வெட்டிய பகுதியில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து, அதனை முகத்தில் நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். அழுத்தமாக தேய்காமல் மென்மையாக தேய்க்க வேண்டும். ஏனெனில் சர்க்கரை சற்று சொரசொரப்பான தன்மை கொண்டதால் அது உங்கள் முகத்தை கீறிவிடலாம். எனவே பொறுமையாக தேய்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி முகத்திற்கு கூடுதல் பொழிவை கொடுக்கும்.
படி: 3
இறுதியாக நம்முடைய முகத்திற்கு பேஸ் பேக் போட்டுக் கொள்ளலாம். அதற்கு ஒரு தக்காளியை எடுத்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கடலை மாவு ஒரு டீஸ்பூன், தயிர் அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், பேஸ்ட் ஆக கலந்து கொள்ள வேண்டும். பிறகு உங்கள் முகத்தில் இதை அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். பிறகு உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறாக நாம் 15 நாட்களுக்கு ஒரு முறை அப்ளை செய்து கொள்ளலாம். இதன் மூலம் நமது முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவை நீங்கி இயற்கையான முறையில் ஒரு பொலிவை நமது முகத்திற்கு தக்காளி பேசியல் (Tomato Facial at home in Tamil) கொடுக்கும்.
மேலும் படிக்க: டயட் உடற்பயிற்சி எதுவும் இல்லாமல் உடல் எடையை இனி ஈஸியா குறைக்க முடியும்! எப்படினு தெரிஞ்சிக்க ஆசையா?