கொரோனாவின் இரண்டாவது அலையில் அனைவரும் சிக்கி தவித்து வரும் நிலையில், திமுக அரசு பல்வேறு விதமான நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரணமாக ரூ 4000 மற்றும் 14 பொருட்கள் கொண்ட மளிகை தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி முதல் தவணையாக 2000 கடந்த மே மாதம் , மீதி உள்ள 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் இந்த மாதமும் வினியோகம் செய்யப்பட்டு வழங்கி வருகிறது.
இரண்டாவது தவணையாக ரூ 2000 மற்றும் இலவச மளிகை தொகுப்பு ஆகியவை இதன் அடிப்படையில் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கன் வாங்காதவர்கள் மாற்று தேதிகள் அறிவிக்கப்பட்டு ரேஷன் கடைகளில் சென்று வாங்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நோய் தொற்று காரணமாக அரிசி பெறும் குடும்பங்களுக்கு நிவாரண தொகை 2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பை 15ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதை ஜூன் 25ஆம் தேதிக்குள் வினியோகித்து முடிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனால் அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனால் வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள் நாளை தான் கடைசி நாள் என்ற சந்தேகத்தில் உள்ளனர். அதனால் வாங்காத அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுகிறது.