ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 முதல் நாள் வசூல் எவ்வளவு?!. வாங்க பார்ப்போம்!…

0
18
movie

உழைப்பாளர் மே 1ம் தேதியை முன்னிட்டு தமிழில் 3 படங்கள் நேற்று வெளியானது. முதலில் கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூர்யாவும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஆனால, கடந்த பல வருடங்களாகவே அவரின் படம் தியேட்டரில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை.

retro
retro

இந்நிலையில்தான் இந்த படம் நேற்று ஒரு நாளில் 20 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் 17.5 கோடியும், மற்ற மாநிலங்களில் 2.5 கோடியும் வசூல் என சொல்கிறார்கள். அடுத்து புதுமுக இயக்குனர் அபிஷன் இயக்கியுள்ள டூரிஸ்ட் படமும் நேற்று வெளியானது.

இலங்கையிலிருந்து முறைகேடாக படகில் தப்பில் சென்னை வந்தும் குடும்பம் சந்திக்கும் பிரச்சனையை இப்படம் பேசுகிறது. சிரிப்பும், எமோஷனலும் கலந்த படமாக டூரிஸ்ட் ஃபேலிமிலி உருவாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்த படம் நேற்று ஒரு நாளில் 2 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், தெலுங்கு நடிகர் நானி நடித்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற படங்களில் வெளியாகியுள்ள ஹிட் 3 படம் 40 கோடி வரை செய்து வசூலில் முதலிடத்தில் இருக்கிறது.

Previous articleஇயக்குனர் மனதில் நினைத்ததை பாட்டில் எழுதிய வாலி!. அஜித் படத்தில் நடந்த சம்பவம்
Next articleஅஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்!.. அடுத்த ஹிட்டு பார்சல்!..