சுற்றுலா பயணியர் வருகை! இந்திய அளவில் தமிழகம் முதலிடம்!

Photo of author

By Sakthi

சுற்றுலா பயணியர் வருகை! இந்திய அளவில் தமிழகம் முதலிடம்!

Sakthi

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலா புள்ளி விபரம் 2022 என்ற 280 பக்க அறிக்கையை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார் ஆவது இந்த வருடத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் 15 கோடி பேரை ஈர்த்துள்ளது.தமிழகம் இதில் முதலிடம் பெற்றுள்ளது. 2ம் இடத்தை பிடித்திருக்கின்ற உத்தர பிரதேசத்திற்கு 9 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்த்ததில் 12.6 லட்சம் பேருடன் மகாராஷ்டிரா முதலிடமும், 12.3 லட்சம் பேருடன் தமிழகம் 2வது இடமும் பெற்றிருக்கின்றன. உத்திரபிரதேசத்தின் ஆக்ரா நகரில் இருக்கின்ற உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை 2021- 22ல் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 30 லட்சம் பேரும், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் 38 ஆயிரம் பேரும் கண்டு ரசித்துள்ளார்கள்.

அதே சமயத்தில் தமிழகத்தின் மாமல்லபுரத்தை வெளிநாட்டு பயணிகள் அதிகம் பேர் ரசித்துள்ளார்கள். இந்த வருடம் இதுவரையில் 1.4 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர்.

உள்நாட்டு பயனியரின் விருப்பத்தில் புதுடெல்லியிலுள்ள செங்கோட்டை, குதுப்மினார் உள்ளிட்டவையும் முக்கிய இடங்களை பிடித்துள்ளனர்.

நாட்டில் 3,693 பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.