சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக களம் இறங்கியவர் சசிக்குமார். அதன்பின் பல படங்களிலும் நடித்திருக்கிறார், நிறைய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பல இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார். சுப்பிரமணியபுரம், ஈசன் போன்ற 2 படங்களை மட்டுமே இயக்கினார்.
இப்போது சிம்ரனுடன் இணைந்து டூரிஸ்ட் பேமிலி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. அயோத்தி படத்திற்கு பின் சசிக்குமாருக்கு இது முக்கிய படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் யோகிபாபுவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இலங்கையிலிருந்து தப்பி சென்னை வந்த ஒரு ஃபேமிலி இங்கு என்ன பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள். எனவே, காமெடியான காட்சிகளும், சீரியஸான காட்சிகளும் இதில் இடம் பெற்றிருக்கிறது.
தங்களை டூரிஸ்ட் ஃபேமிலி என சொல்லி காவல் துறையை ஏமாற்ற நினைக்கும் அவர்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளெய்ல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை காமெடியாகவும், சீரியஸாகவும் காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு சென்னையில் இருக்கும் யோகிபாபு உதவுவது போலவும், இங்குள்ள தமிழை பேச தெரியாமல் அவர்கள் மாற்றி மாற்றி பேசும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதேபோல், சசிக்குமாரின் மகன் வழியாக காமெடியும் செய்திருக்கிறார்கள்.