வேளாண் பட்ஜெட்டில் காப்பாற்றப்பட்ட பாரம்பரியம்! 3 கோடி நிதி! – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேற்று காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல்வருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்றும் தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படுகிறது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
நம் நாட்டில் பாரம்பரிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அதில் ஒன்று தான் பனை. ஆனால் தற்போது யாரும் அதை பராமரிப்பது இல்லை. அது பாரம்பரியமானது என்றாலும் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும். தற்போது அனைவரும் பனை மரத்தை வெட்டி வீசி வருகின்றனர். அதை காப்பதற்காக இப்படி ஒரு பட்ஜெட் தாக்கல் செய்தது அனைவரிடத்திலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
நம் முன்னோர்கள் எல்லாம் பனைமரங்களை ஆற்றங்கரையின் ஓரமும், கடற்கரை ஓரங்களிலும் அதிகமாக நட்டு வைத்திருந்தனர். அதற்கு காரணம் அதன் வேர்கள் மண்ணரிப்பைத் தடுக்கும் என்பதற்காகவே மேலும் சுனாமி போன்றவற்றை தடுக்கும் என்றும் தான் அந்த மாதிரி பரப்புகளில் எல்லாம் பனைமரங்களை விதைத்திருந்தனர். ஆனால் தற்போது பலரும் டிஜிட்டல் இந்தியா மற்றும் வளரும் நாடு என்ற பெயரில் எல்லா மரங்களையும் அழித்து வருகின்றனர். பனைமரத்தின் மூலம் கிடைக்கும் கள், நுங்கு, பனைவெல்லம் என அனைத்திலும் நமக்கு தேவையான சக்திகள் நிறைந்து உடலை குளிர்ச்சியாக்குகின்றன.
அதிலும் பனைமரங்கள் எல்லாம் 120 வயது வரை நமக்காக நன்மை பயக்கிறது. அதன் கடைசி தருவாயில் பூக்களை பூத்து குலுங்கி அதன் ஆயுளை குறைத்துக் கொள்கிறது. இப்போதும் கூட சீனா போன்ற மிக வளர்ந்த நாடுகளில் எல்லாம் கூட பாரம்பரியங்கள் பின்பற்றப்படும் நிலையில் நம் தமிழகத்தில், உள்ள பனை மரங்கள் குறித்து செய்த செயல் அனைவருக்கும் வேதனை அளிப்பதாக இருந்தது.
ஆனாலும் அதை யாரும் காப்பாற்ற கூட ஆள் இல்லாத நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வேளாண் பட்ஜெட் அதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
தற்போது வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் உரையாற்றும் போது அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும் கூறினார்.