கள்ளச்சாராய கும்பலை பிடிக்க சென்ற போலீஸாருக்கு நடந்த விபரீதம்!

கள்ளச்சாராய கும்பலை பிடிக்க சென்ற போலீஸாருக்கு நடந்த விபரீதம்!

வேலூர் மாவட்டம் அருகே கள்ளச்சாராயம் கும்பலை பிடிக்க சென்றபோது காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை அடுத்து 8 காவலர்கள் கொண்ட குழு கள்ளச்சாராய கும்பலை பிடிக்க அப்பகுதிக்கு சென்றனர்.
அப்பொழுது 10 பேர் கொண்ட கும்பல் காவலர்கள் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதில் காவலர்கள் அன்பழகன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.இதனையடுத்து காவலர்களை தாக்கிவிட்டு அக்கும்பல் அவ்விடத்தை விட்டுத் தப்பி ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அல்லேரி மலைப்பகுதிக்கு வேலூர் டிஎஸ்பி மதிவாணன் தலைமையில் 90 காவலர்கள் கொண்ட காவல் படையினர், அவ்விடத்திற்கு விரைந்து, தப்பிச்சென்ற கள்ளச்சாராய கும்பலை தேடி வருகின்றனர்.

Leave a Comment