உக்ரைனின் சுதந்திர தினத்தில் சோகம்! ரஷ்யா நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி!

0
85

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

எதற்கும் சலைக்காமல் உக்ரைனும் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போர் தளவாடங்களை வழங்கி வருகிறது.

சப்தமே இல்லாமல் ரஷ்யா உக்ரைனின் பல முக்கிய நகரங்களை தன் வசப்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் உக்ரைன் நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு முன்பாக சுதந்திர தினத்தன்று எங்கள் மீது தாக்கல் நடத்தப்பட்டால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த போருக்கு நடுவிலும் உக்ரைன் நேற்று முன்தினம் தன்னுடைய சுதந்திர தினத்தை கொண்டாடியது. அப்போது கிழக்கு உக்ரைனில் வீரர்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றுக் கொண்டு சென்ற ராணுவ தொடர் வண்டி மீது ரஷ்யா நேற்று முன்தினம் நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், ஒரு வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 6மற்றும் 11 வயது சிறுவர்களின் உடல்களும், கார் தீ பிடித்ததில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் நேற்று கைப்பற்றப்பட்டனர். இதன் காரணமாக, தொடர்வண்டி நிலைய தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்தது.

ஜெனிவாவில் ஐநாவின் மனித உரிமை தலைவர் மிச்செல் பச்செலெட் நேற்று உரையாடியபோது ரஷ்ய அதிபர் புட்டின் உக்ரைன் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது, உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.