சென்ற மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், நேற்றைய தினம் இந்த பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில் கன்னியாகுமரி முதலிடத்தை பிடித்திருக்கிறது, அதேபோல பெரம்பலூர் மாவட்டம் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்தநிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்துள்ள நாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகள் ஷீபாஸ்ரீ இவர் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், நான் தேர்வு சரியாக ஒழுங்காக தான் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வருவதற்கான வாய்ப்புள்ளது. தேர்வில் நான் தேர்ச்சி பெறுவது சந்தேகம் என்று தன்னுடைய பெற்றோர்களிடம் தொடர்ச்சியாக தெரிவித்து வந்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், நேற்று மாலை முதல் ஷீபாஸ்ரீயை காணவில்லை என்று தேடி வந்த சூழ்நிலையில், இன்று காலை வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் அந்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக காவலூர் காவல்துறையைச் சார்ந்தவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்கள்.
இந்நிலையில், நேற்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அந்த மாணவி 344 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.