கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட அவலம்??

Photo of author

By Pavithra

தற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுதலின் வீரியம் உருவெடுத்துள்ளது.வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.

அந்த உயிரிழந்த நபர் அந்த மருத்துவமனையில் வேலைச் செய்யும் ஒருவரின் உறிவினர் ஆவர்.அவர் எங்களிடம் உடலைக் தரும்படி கேட்டார். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கு அவர் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் கொரோனா பாதித்தவரின் உடலை ஆட்டோவில் ஏற்றி சென்று விட்டார் என்று அம்மருத்துவமனையின் டீன் கூறியுள்ளார்.

கொரோனர்த் தொற்று இறந்தவரின் உடலில் இருந்தும் பரவ வாய்ப்பிருக்கும் நிலையில், இது போன்று எந்த பாதுகாப்பு கவசமும் இன்றி இறந்தவரின் உடல் ஆட்டோவில் எடுத்துச் சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு அவசர அவசரமாக இறந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்டக் காரணத்தை குறித்து போலீசார் தரப்பில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.