ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு!!

0
246
#image_title

ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு!

ஒடிசா மாநிலம் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழர்களை மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நேற்று மூன்று இரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த காயமடைந்த 55 பேரை முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விமானம் மூலமாக தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புவனேஷ்வரில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் அவர்களை தமிழகம் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காயம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தமிழகத்தில் நான்கு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைக்க மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் தீவிர சிகிச்சை பிரிவையும் பிணவறையையும் தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Previous articleஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!
Next articleவளர்த்த நாய்க்கு 16.5 லட்சத்தில் வீடு! யூடியூபர் செய்த செயல்!!