இந்த வருடம் மார்ச் 29ஆம் தேதி சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. இந்த பெயர்ச்சியினால் இத்தனை நாட்களாக மேலும் ராசியினர் கண்ட துன்பங்கள் அனைத்தும் விடுபடும். மேலும் இந்த சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சியினால் ஒரு நான்கு ராசிக்காரர்களுக்கு பணத்தை இழக்க கூடிய வாய்ப்புகளும் உள்ளது.
29 ஆம் தேதி மார்ச் மாதம் இரவு சனி பகவான் கும்பம் ராசியிலிருந்து மீன ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி அடைகிறார். எனவே சனி பகவான் உங்கள் ராசியிலேயே அமர்ந்து தைரிய ஸ்தானம், களத்திர ஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகியவற்றை பார்வை செய்கிறார். எனவே ஜென்ம சனி பிடியில் சிக்க போகிறீர்கள்.
தேவையற்ற மன குழப்பங்கள், மனக்கவலை, உடல் நல உபாதைகள் போன்றவற்றை அவரவர் வயதுக்கு ஏற்றவாறு சனி கொடுப்பார். காதல் விஷயங்களில் சிக்கி மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும். தைரியத்தை சனி கெடுப்பார். கூட்டாளிகளுடன் பிரச்சனை, சமுதாயத்தில் கெட்ட பெயர், கூட்டுத் தொழிலில் நஷ்டம் போன்றவை ஏற்படும். எனவே சனி பகவான் உங்கள் ராசியில் இருந்து விலகும் வரை சற்று எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ஆனால் கோச்சார நாயகன் சந்திரன் ஜாதகத்தில் பாதிக்கப்படாதவர்கள், நல்ல தசா புத்திகள் நடப்பில் இருப்பவர்கள், லக்னாதிபதி வலுப்பெற்றவர்களுக்கு அதிக கெடுதல்கள் இருக்காது எனவும் ஜோதிடம் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சியினால் இன்னும் 4 ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவை கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகும்.
இந்த நான்கு ராசிக்காரர்களும் அவர்களது வாழ்க்கை துணை, உடல்நிலை, வேலை, பணம், காதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.