#திருட்டுப்பயதிருமாவளவன் தேசிய அளவில் அசிங்கப்பட்ட திருமாவளவன்

Photo of author

By Ammasi Manickam

#திருட்டுப்பயதிருமாவளவன் தேசிய அளவில் அசிங்கப்பட்ட திருமாவளவன்

Ammasi Manickam

Updated on:

#திருட்டுப்பயதிருமாவளவன் தேசிய அளவில் அசிங்கப்பட்ட திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சமீப காலமாக இந்து மதத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் மத சார்புடைய விழாவில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் இந்து மத கோவில்களை கொச்சை படுத்தும் வகையில் பேசி கடும் அதிருப்திக்கு உள்ளானர். இதனால் அவருக்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் தற்போது வழக்கத்தில் இல்லாத மனு தர்ம சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்டு இந்து பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இவருடைய இந்த பேச்சை எதிர்த்து பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். இதற்கு பதிலளித்த திருமாவளவன் தான் பேசியதை முழுமையாக கேட்காமல் வெட்டி மற்றும் ஒட்டி தனக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வருவதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #திருட்டுப்பயதிருமாவளவன் என்ற ஹேஷ் டேக்கில் அவருக்கு எதிரான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த #திருட்டுப்பயதிருமாவளவன்  ஹேஷ் டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் பார்க்காமல் அவர் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் படு கேவலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.அவருக்கு எதிரான சில விமர்சன பதிவுகள்.

தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் மாற்று மத வாக்குகளை கவர திருமாவளவன் பேசியது தற்போது அவருக்கு எதிராகவே கிளம்பியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.