இணையத்தில் டிரெண்டாகும் BUT NO EYES ON MANIPUR! ரஃபாவை தெடர்ந்து மேலும் ஒரு வாசகம் வைரல்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணையத்தையே உலுக்கி போட்ட வாக்கியமான ஆல் அய்ஸ் ஆன் ரஃபா(ALL EYES ON RAFAH) என்ற வாக்கியத்தை தொடர்ந்து தற்பொழுது இணையத்தில் பட் நோ அய்ஸ் ஆன் மணிப்பூர்(BUT NO EYES ON MANIPUR) என்ற வாசகம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாடு ரஃபா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ரஃபாவில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகளும் அடங்குவர். மேலும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இணையத்தில் அனைவரும் “ஆல் அய்ஸ் ஆன் ரஃபா” என்ற வாக்கியத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்தனர். தற்பொழுது காங்கோ நாட்டின் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் “ஆல் அய்ஸ் ஆன் காங்கோ” என்ற வாசகமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதற்கு மத்தியில் “பட் நோ அய்ஸ் ஆன் மணிப்பூர்” என்ற வாசகம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. வெளிநாடுகளில் நடக்கும் சம்பவங்களுக்கு மட்டும் வாசகங்களை போட்டு கருத்துக்கள் தெரிவிக்கும் நிலையில் இந்தியாவின் மாநிலமான மணிப்பூரில் நடைபெற்றதை பற்றி ஏன் யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதை இந்த வாசகம் கூறுகின்றது.
கடந்த வருடம் மணிப்பூர் மாநிலத்தில் குகி மற்றும் மெய்தே சமூகத்தினர் மத்தியில் பெரும் வன்முறை உண்டானது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் பலருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. மேலும் அது மட்டுமில்லாமல் 50000 மக்கள் மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். மெய்தே மற்றும் குகி இனத்தை சேர்ந்த தம்பதிகள் பிரிந்து வாழும் சூழலும் ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மணிப்பூர் வன்முறை நடைபெற்று ஒரு வருடத்தை நெருங்கிய நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதை அறிவுறுத்தும் வகையில் “பட் நோ அய்ஸ் ஆன் மணிப்பூர்” என்ற வாசகம் இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.